This is a Brave Payments publisher verification file. Domain: batticaloamunicipal.blogspot.com Token: 64f23aa52896f0b3e13d07b05222ab8438fc3539e56dd482bad0a2549f9c926b
thumbnail

மட்டு. மாநகரசபை சுத்தானந்தா பாலர் பாடசாலை விளையாட்டு விழா


Show

மட்டக்களப்பு மாநகரசபையினால் நடாத்தப்படும் நாவற்குடா சுத்தானந்தா பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு நிகழ்வு மாநகர ஆணையாளர் திரு.நா.மணிவண்ணன் அவர்களின் தலைமையில் 25.07.2018 அன்று இடம்பெற்றது. 

சிவஸ்ரீ உ.ஜெயகிருஸ்னா  அவர்களின் ஆசியுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் வெற்றியீட்டிய மற்றும் பங்குபற்றிய சிறார்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மாநகர முதல்வர் கௌரவ தி.சரவணபவன், மாநகர பிரதி முதல்வர் கௌரவ க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர் கௌரவ ம.நிஸ்கானந்தராஜா, பாலர் கல்விப் பணியகப் பணிப்பாளர் திரு.எஸ்.சசிதரன், கலாபுஷணம் எஸ்.வைரமுத்து மற்றும் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.ச.சந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளையாட்டு நிகழ்வுகள் பாடசாலை அதிபர் திருமதி.சுந்தரமதி வேதநாயகம் அவர்களின் வழிநடத்தலில் சிறப்பாக இடம்பெற்றது.















thumbnail

SWM - கழிவு முகாமைத்துவம்


Show






thumbnail

மாநகர வரலாறு


Show

• Batticaloa city was administered by local board from 1884 to 1932
• The city was promoted to an Urban Council in 1933. (8 wards)
• Revision of Wards  in 1944 (10 wards) (10.17 sq. miles)
• Revision of Wards  in 1956 (14 wards)
• Batticaloa Urban Council was upgraded in to a Municipal Council in 01.07.1967. (19 wards)
• Batticaloa Municipal Council absorbed Valayeravu Rural Council, Sinna Urani Sub and Kallady Sub In 1988. (24 wards) (75.09 sq.Km)

thumbnail

பாதீடு 2018


Show

thumbnail

மாநகர சேவைகள்


Show

திட்டமிடல் பிரிவு 

(Planing Unit)

1. புதிய கட்டடம் / சுற்றுமதில் ஒன்று அமைப்பதற்கான அனுமதி

  • எமது அலுவலகத்தில் பெறப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் - 02 பிரதி (ரூபா.300.00 விண்ணப்ப கட்டணம்).
  • கட்டட வரைபடம் - 03 பிரதிகளுடன் மூலப்பிரதி
  • காணி உத்தரவாதப் பத்திரம் - 03 பிரதிகளுடன் மூலப்பிரதி
  • நில அளவைப்படம் - 03 பிரதிகளுடன் மூலப்பிரதி
  • சோலைவரி செலுத்திய பற்றுச் சீட்டு பிரதியுடன்
  • உறுதிக்காணியின் வரலாற்றுத் தாள் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி - 01 (30 வருடங்களிற்குரியது).
  • காணி உபபிரிவிடுகை செய்யப்பட்டிருப்பின் அதன் பிரதி.
Note : சுற்றுமதில் அமைத்தலின் போது மேற்கொள்ள வேண்டிய மேலதிக விடயம்
வீதி விஸ்தரிப்பின் போது மதில் உடைக்கப்பட வேண்டிய தேவை ஏற்பட்டால் நஸ்ட ஈடு கோரா உடன்படிக்கைப் படிவம் சமர்ப்பித்தல் வேண்டும் (உடன்படிக்கை ரூபா.50.00 செலுத்தி அலுவலகத்தில் பெற்ற விண்ணப்பத்தில் 12.50 முத்திரை ஒட்டி சட்டத் தரணி மூலம்உறுதிப்படுத்தப்பட்டிருத்தல்) (அவசியமேற்படின் மாத்திரம் அறிவுறுத்தப்படும்).

2. காணி உபபிரிவிடுகை அங்கீகாரம் வழங்கல்

  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் - 03 பிரதி (ரூபா.250.00 கட்டணம் காசாளர் பகுதியில் செலுத்தப்படல் வேண்டும்.
  • காணியின் உறுதி 03 பிரதிகளுடன் மூலப்பிரதி
  • நிலஅளவைப் படம் 03 பிரதிகளுடன் மூலப்பிரதி
  • நடப்பாண்டில் சோலைவரி செலுத்திய பிரதியுடன்
  • உபபிரிவிடுகை செய்யப்படும் காணியினது 30 வருட வரலாற்றுத்தாள் பிரதியுடன்.
  • காணிக்குள் கட்டடம் இருந்தால் அங்கீகர்க்கப்பட்ட கட்டட வரைபட பிரதியுடன்
  • காணி ஏற்கனவே உபபிரிவிடுகை செய்யப்பட்டிருப்பின் அதன் அங்கீகரிக்கப்பட்ட பிரதி


3. அங்கீகரிக்கப்பட்ட கட்டடத்திற்கான இயைபுச்சான்றிதழ் பெறல்

இயைபுச் சான்றிதழ் படிவத்தினை அலுவலகத்தில் பெற்று அங்கீகரிக்கப்பட்ட கட்டட விண்ணப்பத்துடன் சமர்ப்பித்தல்

4. வீதி ரேகைச் சான்றிதழ் வழங்கல்


  • காசாளர் பகுதியில் ரூபா.300.00 செலுத்தப்பட்ட விண்ணப்பப்படிவம்.
  • காணியின் உறுதி, பிரதி.
  • நடப்பாண்டில் வரையப்பட்ட நிலஅளவைப்படம் 02 பிரதிகள்.



ஆதன வரிப்பகுதி சேவைகள் 

(Assessment Revenue Branch)

1. பெயர் மாற்றம் 


  • பெயர் மாற்றத்திற்கான விண்ணப்பம் (ATD Form), காசாளர் பகுதியில் 100.00 செலுத்தி பெறப்பட்டு, பூரணப்படுத்தப்பட்டு சட்டத்தரணி/நொத்தாரிஸ் ஒருவரால் உறுதிப்படுத்தப்பட வேண்டும் / குத்தகைப் பத்திரம் ஆயின் உரிமையாளரினால் பூரணப்படுத்தப்பட வேண்டும்.
  • ஆதனத்திற்கான உறுதி, பிரதியுடன் (1)
  • நடப்பாண்டில் வரையப்பட்ட நில அளவைப் படம் பிரதியுடன் (2)
  • உறுதிக்கான 30 வருட வரலாற்றுத் தாள், பிரதியுடன் (1)
  • உப பிரிவிடுகை செய்யப்பட்ட காணியின் அங்கீகாரப் படிவம் பிரதியுடன் (1)
  • முடிக்குரிய குத்தகைக் காணியாயின் காணிப்பதிவு தொடர்பாக  பிரதேச செயலாளரால் ஆணையாளருக்கு எழுதப்பட்ட கடிதம், நில அளவைப்படம் 2 பிரதிகளுடன்
  • ஆதனத்திற்குரிய சோலைவரி நிலுவைகளுடன் தீர்ப்பனவு செய்யப்பட வேண்டும்.

2. உரிமைச் சான்றிதழ் / சுவீகரிக்கப்படாத சான்றிதழ் 

காசாளர் பகுதியில் 100.00 செலுத்தி விண்ணப்பம்  பெறப்பட்டு பூரணப் படுத்தப்பட்டு  ஆதனவரிப்பகுதியில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

3. மேலதிக ஆதனவரி இலக்கத்தினைப் பெற்றுக் கொள்ளல் 

(மேல் தளங்களுக்கு, கடைகள்)
  • கோரிக்கைக் கடிதம்
  • ஆதனத்தினை உறுதிப்படுத்துவதற்கான ஆவணம், பிரதி
  • மாநகர சபையினால் அங்கீகரிக்கப்பட்ட கட்டிட வரைபடம், பிரதி

4. உப பிரிவிடுகை செய்யப்பட்ட ஆதனங்களுக்கு இலக்கங்கள் வழங்கல்


  • கோரிக்கைக் கடிதம்
  • ஆதனத்தினை உறுதிப்படுத்துவதற்கான ஆவணம், பிரதி
  • மாநகர சபையினால் அங்கீகரிக்கப்பட்ட கட்டிட வரைபடம், பிரதி




நானாவிதவருமானப் பகுதி சேவைகள்  

(Miscellaneous Revenue)

1 வியாபார உரிமம் வழங்கல்


  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை நானாவிதவருமானப் பிரிவில் சமர்ப்பித்தல்.
  • மதிப்பீட்டின் பிரகாரம்  கட்டணம் செலுத்தப்பட்டு பற்றுச்சீட்டை பெறுதல்.


2 பொது அரங்காட்ட அனுமதி


  • மாநகர ஆணையாளர் எழுத்து மூலமாக நேரடி அனுமதி.
  • உரிய மதிப்பீட்டுக் கட்டணம்.


3 வியாபார நிலையங்களில் பெயர்ப்பலகை விளம்பரப்படுத்தல்.


  • நானாவித வருமானப் பிரிவில் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று பூரணப்படுத்தி ஒப்படைத்தல்.
  • உரிய கட்டணத்தை நானாவித வருமானப்பிரிவில் செலுத்தி அனுமதியினைப் பெறல் (கட்டணம் சதுர அடிக்கு ரூபா.50.00)


4 நிரந்தர விளம்பர பலகை கட்டண அறவீடு


  • அமைவிடம் பரிசீலிக்கப்பட்டதன் பின் மதிப்பிடப்பட்ட கட்டணம் அறவிடப்பட்டு அனுமதி வழங்கப்படும் (சதுர அடிக்கு ரூபா.50.00).
  • செல்லுபடியாகும் காலம் 1 வருடம் (தை தொடக்கம் மார்கழி வரை)



5 பதாதைகளுக்கான அனுமதி


  • பதாதையுடன் வேண்டுகோள் கடிதம் சமர்ப்பித்தல்.
  • நானாவித வருமானப் பிரிவில் ஒப்படைத்து அனுமதியினைப் பெற்றுக்கொள்ளல்.
  • பதாதைகளைக் கட்டுவதற்கு அனுமதி வழங்கல்.
  • அனுமதி பெறாது கட்டப்படும் பதாதைகள் மாநகர சபையால் உடன் அகற்றப்படும்.
  • மணிக்கூட்டுக் கோபுரங்கள், சுற்றுவட்டாரங்கள், மாநகர சிறுவர் பூங்கா, பாதுகாப்பு வேலி ஆகியவற்றில் பதாதையிட அனுமதிக்கப்பட மாட்டாது.


6 மாநகர சபைக்குச் சொந்தமான சந்தை, கடைகளை குத்தகைக்கு விடல், வாடகைக்கு விடல்.


  • நானாவித வருமானப் பகுதியில் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளல்.
  • நிர்ணயிக்கப்பட்ட பணத்தொகை வைப்புச் செய்து பற்றுச் சீட்டில் பெற்றுக்கொள்ளல்.
  • பூர்த்தி செய்யப்பட்ட கேள்வி விண்ணப்பப் பத்திரங்களை உரிய கால எல்லையுள் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட ஆவணங்களுடன் அலுவலகத்திலுள்ள கேள்விப் பெட்டியினுள் இடல் அல்லது பதிவஞ்சல் மூலம் அனுப்புதல்.
  • கேள்விப் பெட்டி திறக்கும் நேரத்தில் அலுவலகத்திற்கு சமூகமளித்து தெரிவு தொடர்பில் உறுதிப்படுத்திக்கொள்ளல்.


7 வாகன, மிருக வரி உரிமத்தகடுகள் பெறல் (துவிச்சக்கரவண்டி, நாய்).


  • உரிமத் தகட்டுக்கான கட்டணத்தை நானாவித வருமான வரிப் பிரிவில் செலுத்துதல்
  • அனுமதி தகட்டை பெற்றுக்கொள்ளல்.


8 மாநகரசபைக்கு சொந்தமான மண்டபங்கள், விளையாட்டரங்கு, பூங்காக்களை பாவனைக்கு விடல்.


  • விண்ணப்பதாரி வேண்டுகோள் கடிதத்தை சமர்ப்பித்தல்.
  • தேவைப்பட்ட நாளில் வெற்றிடமுள்ளதா என உரிய பிரிவில் உறுதிப்படுத்திக்கொள்ளல்.
  • அனுமதியைப் பெற்றுக்கொள்ளல்.
  • மண்டப ஒதுக்கீடு

நூலக கேட்போர் கூடம் - ரூபா.5000.00
     அரச நிறுவனம் (குளிரூட்டியுடன்)  - ரூபா.3000.00.
   அரச நிறுவனம் (குளிரூட்டியற்றது) - ரூபா.2000.00.
     அரசசார்பற்ற நிறுவனம் (குளிரூட்டியுடன்) - ரூபா.5000.00
     அரசசார்பற்ற நிறுவனம் (குளிரூட்டியற்றது) - ரூபா.4000.00

எல்லை வீதி மாநகரசபை மண்டபம் - ரூபா.4000.00
வெபர் விளையாட்டரங்கு - ரூபா.750.00
நகர மண்டபம் (குளிரூட்டல் வசதியுடன்) - ரூபா.17000.0010 ரூபா.5000.00
நகர மண்டபம் (குளிரூட்டல் வசதியின்றி) - ரூபா.12000.0010 ரூபா.5000.00
(மீளளிக்கப்படும் வைப்பு - ரூபா.5000.00)
ஒரு கதிரைக்கான வாடகை கட்டணம் - ரூபா.5.00

9 களியாட்ட வரி


  • கோரிக்கைக் கடிதம்.
  • நிகழ்சியை நடாத்துவதற்கான அனுமதியை மட்டக்களப்பு மாநகர சபையில் பெற்றுக்கொள்ளல்.
  • நுழைவுச் சீட்டு பயன்படுத்த உத்தேசிக்கப்பட்டால் அவற்றினை ஒப்படைத்து அதில் மாநகர ஆணையாளரின் முத்திரையைப் பொறித்துக்கொள்ளல் வேண்டும்.
  • நுழைவுச்சீட்டுக்கான வரிப்பணத்தினை நுழைவுச்சீட்டின் மூலம் பெறுமதியின் 25% செலுத்தப்பட வேண்டும்.
  • நிகழ்ச்சி முடிந்த பின்பு விற்பனை செய்யப்படாத நுழைவுச் சீட்டுகளை மீள் ஒப்படைத்து மீளளிப்பினைப் பெற்றுக்கொள்ளல்.


10 திரையரங்குகளுக்கான வரி


  • திரையரங்குக்கான அச்சடித்த மொத்த நுழைவுச்சீட்டுக்களையும் ஒப்படைத்து அதில் மாநகர ஆணையாளரின் முத்திரையைப் பொறித்து பெற்றுக்கொள்ளல் வேண்டும்.
  • தினமும் விற்பனையாகும் நுழைவுச் சீட்டுக்கள் விபரம் களியாட்டவரி விபரப்படிவத்தின் மூலம் மாநகர சபைக்கு சமர்ப்பித்து அதன் பெறுமதியின் 10% சபைக்கு செலுத்துதல்.





சுகாதாரப்பிரிவு 

(Health and Solide waste management)


1 சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப் பத்திரம் பெறல்


  • கோரிக்கை கடிதம்.
  • அலுவலகத்தின் ரூபா.50.00 பணத்தினை செலுத்தி பெற்ற விண்ணப்பத்தினை பூர்த்தி செய்தல்.
  • வியாபாரம் இடம்பெறும் காணியின் உறுதி, பிரதி.
  • அங்கீகரிக்கப்பட்ட கட்டட அனுமதி, பிரதி.
  • குடிபுகு சான்றிதழ், பிரதி.
  • நில அளவைப் படம், பிரதி (நடப்பு ஆண்டுக்குரியது)


2 கழிவு நீர்த் தொட்டி, மலசல கூட குழி துப்பரவு செய்தல்.

  • கோரிக்கைக் கடிதம்.
  • மதிப்பீட்டின் பிரகாரம் எமது அலுவலகத்தில் உரிய கட்டணத்தை செலுத்தி பெறப்பட்ட பற்றுச் சீட்டு.


3 மயானத்தில்  பிரேதங்களை அடக்கம் செய்தல்


  • அனுமதிக் கோரிக்கை கடிதம்.
  • இறந்தவரின் மரணப்பதிவு பிரதி அல்லது இறந்தவரின் மரணத்தை உறுதிப்படுத்தும் ஆவணம்.
  • கிராம அலுவலரின் வதிவிடத்தை உறுதிப்படுத்திய கடிதம்.
  • அனுமதிப் பற்றுச் சீட்டினை அலுவலகத்தில் பெற்று மயானப் பாதுகாவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.


4 மயானத்தின் கல்லறை கட்டுவதற்கான அனுமதி.


  • கோரிக்கை கடிதம்.
  • அலுவலகத்தில் ரூபா.7500.00 செலுத்தி பற்றுச்சீட்டினை பெற்றுக் கொள்ளல், ஒரு பிரதியினை மயானப் பாதுகாவலரிடம் சமர்ப்பித்தல்.
  • கல்லறை கட்டுவதற்காக 3 x 3 இடப்பரப்பினை மாத்திரம் பயன்படுத்தல்.


5 சாதாரண கழிவுகளிற்கு மேலதிகமானவற்றை அகற்றுவதற்கான அனுமதி.


  • கோரிக்கை கடிதம்.
  • பொதுச்சுகாதாரப் பரிசோதகரின் மதிப்பீட்டின்படி சுகாதாரப்பிரிவில் பற்றுச்சீட்டினைப் பெற்றுக்கொள்ளல்.
  • அலுவலகத்தில் காசாளர் பகுதியில் கட்டணம் செலுத்தப்பட்ட பற்றுச் சீட்டினை சுகாதாரப் பிரிவில் சமர்ப்பித்தல்.

thumbnail

மாநகர சுயவிபரம்


Show
Batticaloa City Profile

General Information
Province                                                         - Eastern
District                                                            - Batticaloa
Divisional Secretariat                                 - Manmunai North
Electoral District                                          - Batticaloa

Basic Information 


Extent of Council Area  :  75.09 Sq.km

Population : 92,753

Gender

  • Male       - 45,298      (49%)
  • Female    - 47,455      (51%)

Ethnic 

  • Sri Lankan Tamils    - 82,882         89.36%
  • Burgers                     - 4,455            4.80%
  • Muslims                    - 4,678            5.04%
  • Sinhalese                   - 223               0.24%
  • Indian Tamils            - 515               0.56%

Families

Man Headed        - 21757

Woman Headed   - 3779


Villages  124

GN Divisions  48


Total Village 121

Wards  20

PHI Areas  09

ECONOMY : Fishing, Trade , Agriculture, and Tourism

CLIMATE :
  • Annual rainfall : 864- 3081mm.
  • Mean Annual Temperature:  32° C


Location of the City

Batticaloa Municipal Council limit coincides with the Manmunai North D.S.Division

Global Positioning System :
  • North  580824.828 M
  • East  598832.632 M

Boundary : 
  • North  – Eravur Pattu Southern Boundary
  • East     – Bay of Bengal
  • South   – Kattankudy Urban Council Northern Boundary
  • West   – Lagoon


Mandatory Function of MC


Public Health
–Solid waste Management
–Waste water Management
–Slaughter House
–Night Solid treatment plant
–Incinerator
–Land fill management
–Compost Yard
–Organic Garden
–Prevention of Non - Communicable Disease
–Prevention of Communicable Disease (Dengue Prevention)

Public Utilities
–Play Ground
–Public Park
–Children Park
–Public Toilets
–Public library
–Reading Rooms
–Cemetery, Crematorium
–Pre Schools
–Green Belt
–Eco park
–Tree Planting

Public thoroughfare
–Rural Roads construction and maintenance
–Drainage Construction
–Culvert
–Disaster risk Reduction Unit
- Fire Brigade
- Board Service
– Building Plan Approval
– Sub Division
– C of C
– Street line

Revenue

Assessment Tax
      - Ownership, Non-vesting 
      - ATD

Miscellanies Revenue
 - Stamp Duty 
 - Leasing
 - Trade Tax
 - Outside shop rent
 - Rest house rent
 - Market shop rent
 - Entertainment tax
 - Advertisement tax
thumbnail

MC Ward Map


Show


thumbnail

தகவல் அறிய


Show



State and the public institutions are maintained by the tax monies of people. Thus, the fundamental principle being established is that the people have the right to know information of which the functions of the state are accomplished using public funds.
In order to effectively safeguard the said right to information to be effectively protected, there are three core prerequisites to be concerned with.

I. Access to information

Access to information denotes that the ability of people to receive information with no hindrance. It means the free availability of information and also diverse range of means of receiving information are operated within the society. Particularly, what is most significant is that the ensuring a state of affairs that enshrines no censorship or restriction on media and having freedom of access to information without any undue influence.

II. Responsibility of state institutions to publish information

State institutions should be embedded with a responsibility to establish an enabling ambiance for people to have access to information which are significant for them. Further, it will also be the obligation of the state to guarantee that the information are available for people in a simple and an understandable manner.

III. Responsibility to release information

Responsibility to release information signifies the obligation of releasing information affiliated to different personnel upon a due request. Subject to exceptions such as state secrets, people should have the right to demand information from state institutions. Releasing private information and information related to accomplishments being done using the public tax funds is a responsibility of public officials. It is a right of the people to receive such information without any delay and with complete accuracy.

thumbnail

ஜனாதிபதியிடம் தெரிவிக்க


Show

thumbnail

தொடர்புகளுக்கு


Show






Mr.Thiyagaraja Saravanapavan
Hon.Mayor,
Office Telephone :- 065-2227066                      
Mobile:- 077-8488318
  




Mr.Nagarasa Manivannan (SLAS-I)
Municipal Commissioner,
Off.Tele:- 065-2222666                      
Mobile:- 077-7772308
e.mail :- battimc@gamil.com






Mr.Kanthasamy Sathiyaseelan
Hon.Deputy Mayor,
Off.Tele:- 065-2224785                      
Mobile:- 077-90054498







Mr.Nagarajah Thananjeyan (SLAS-III)
Deputy Commissioner,
Off.Tele:- 065-2223774                      
Mobile:- 077-9993244
e.mail :- battimc@gamil.com







Mr.M.R.Siyahul Haque (SLAS-III)
Municipal Secretary,
Off.Tele:- 065-2227438                                  
Mobile:- 077-5153170, 076-5351538
e.mail :- battimc@gamil.com                         








Eng.TharumalingamThevatheepan (SLEng.S-III)
Civil Engineer,
Off.Tele:- 065-2223093                                  
Mobile:- 077-9795269
e.mail :- battimc@gamil.com











Mr.Augaustin Surendran Johnpillai (SLAc.S-III)
Accountant,
Off.Tele:- 065-2222274                                  
Mobile:- 077-5572122
e.mail :- battimc@gamil.com












Dr.Mrs.Pratheepa Partheepan  (SLAy.MS-III)
Medical Officer,
Off.Tele:-                                             
Mobile:- 077-6682747
e.mail :- battimc@gamil.com











Mrs.Rohini Vickneswaran (PPMAS)
Administrative Officer,
Off.Tele:- 065-2222275                                  
Mobile:- 071-3059893
e.mail :- battimc@gamil.com